ஜனவரி 26, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் ஜனவரி 26, 2010 அன்று கடந்த ரமலானில் பித்ரா கொடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் விதமாக மார்க்க சொற்பொழிவு மற்றும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் அபூ சுஹல் அவர்கள் சிறப்பு உரை நிகழ்த்தினார்கள்.
தேர்வு செய்யப்பட்ட சுமார் 40 முஸ்லிம்களுக்கு மார்க்க சொற்பொழிவும் அதனை தொடர்ந்து லுஹர் தொழுகையும் அதனை தொடர்ந்து மதிய விருந்தும் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !