Showing posts with label கிளை நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label கிளை நிகழ்ச்சிகள். Show all posts
Saturday, September 11, 2010
நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார் திருநகர் TNTJ கிளையில் செப்டம்பர் 10, 2010 அன்று நோன்புப் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. முதலாவதாக பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தை முடித்த பிறகு சகோதரர் யூஸுப் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் 500க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த முறையில் பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

Labels:
கிளை நிகழ்ச்சிகள்
பித்ரா விநியோகம்
செப்டம்பர் 9, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர்) கிளையில் நோன்பு பெருநாள் தர்மம் பித்ராவை கூட்டாக வசூலித்து சுமார் 31,250 ருபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் தகுதியுள்ள 125 ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
(குறிப்பு: ஒரு ஸாஉ என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)
பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன் இந்த தர்மத்தை வழங்கிவிட வேண்டும், பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்கக் கூடாது. பித்ரா திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கு புகாரி 3275, 5010 ஹதீஸ்கள் ஆதரமாக அமைந்துள்ளது.
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
ஆங்கில பேச்சுப் பயிற்சி மற்றும் TNPSC விழிப்புணர்வு முகாம்

ஆகஸ்ட் 22, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர்) கிளையில் மாணவர்களுக்கான சிறப்பு ஆங்கில பேச்சுப் பயிற்சி மற்றும் TNPSC விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரர் ஜுனைத் அவர்கள் ஆங்கில பேச்சுப் பயிற்சி அளித்தார்கள். சகோதரர் அப்துல் மாலிக் அவர்கள் Tamil Nadu Public Serive Comission (TNPSC) தேர்வுகள் பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.
மாணவர்கள் திரளாக ஆர்வமுடன் பங்கு பெற்று பயன் அடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்.
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Friday, September 10, 2010
Saturday, August 14, 2010
அருள்வளம் மிக்க மாதம்
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904.
மனிதர்கள் செய்யும் நற்செயலுக்கான கூலி பத்திலிருந்து எழுநூறு மடங்காக பல்கிப் பெருகுகின்றன நோன்பைத் தவிற, நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன், எனது அடியான் எனக்காக தனது உணவையும், இச்சiயையும் விட்டு விடுகிறான், என்று இறைவன் கூறுவதாக பெருமானார்(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். புகாரி, முஸ்லீம்.

Thursday, August 12, 2010
சிறப்பு தர்பியா (நல்லோழுக்கப் பயிற்சி) முகாம்

ஆகஸ்ட் 1, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர்) கிளையில் சிறப்பு தர்பியா (நல்லோழுக்கப் பயிற்சி) முகாம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரர் தவ்பீக் (மதுராவயல்) தலைமை தாங்கினார். குர்ஆன் மனனம், துஆ மனனம், சொற்பொழிவு போன்ற பல்வேறு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் சகோதரர் ரியாஸ் முதல் பரிசையும் (PJ குர்ஆன் தமிழாக்கம்), சகோதரர் அஜாஸ் இரண்டாவது பரிசையும் (திர்மீதி) தட்டிச் சென்றார்கள்.
கிளை சகோதரர்கள் திரளாக ஆர்வமுடன் போட்டிகளில் பங்கு பெற்றனர்.
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Sunday, July 18, 2010
இரத்த தான முகாம்
ஜூலை 25, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர்) கிளையின் ஐந்தாவது இரத்த தான முகாம் நடைபெற்றது.
.. ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் .. -திருக்குர்ஆன் 5:32
இரத்த தானம் செய்வது மனித நேய வெளிப்பாட்டின் மிகக் சிறந்த அடையாளம்.
ஒருமுறை செய்யும் இரத்த தானம் மூலம் அதிகபட்சமாக 4 (நான்கு) உயிர்கள் காக்கப்படுகின்றன.
இரத்த தானம் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், எந்த தீங்கும் ஏற்படாது.

இம்முகாமில் மொத்தம் 106 நபர்கள் கலந்து கொண்டு 96 பேர் இரத்த தானம் செய்தனர், அல்ஹம்துலில்லாஹ்.

இரத்த தான முகாம்,
கிளை நிகழ்ச்சிகள்
Tuesday, July 13, 2010
கல்வி உதவி
ஆழ்வார்திருநகர் கிளையில் நமது சமுதாயத்தை சேர்ந்த ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு ருபாய். 25,000/- கல்வி உதவி வழங்கப்பட்டது, 13 மாணவர்கள் பயன் அடைந்தது குறிப்பிடத்தக்கது, அல்ஹம்துலில்லாஹ்...

Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Sunday, May 23, 2010
நிர்வாகத் தர்பியா
மே 08, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் நிர்வாகிகளுக்கான நிர்வாகத் தர்பியா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் சகோதரர் தவ்பீக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தோன்றிய வரலாறு, மற்ற ஜமாஅத்துக்களை விட எவ்வாறு தனித்து விளங்குகிறது போன்ற தலைப்புகளில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Sunday, May 2, 2010
தொலைக்காட்சி வாயிலாக

மே 02, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் தொலைக்காட்சி வாயிலாக தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களின் உரைகளை மக்களுக்கு காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், முதலாவதாக PJ அவர்களின் “தேன் துளிகள்” ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கிளை சகோதரர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெறவும் இன்ஷாஅல்லாஹ்.
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Tuesday, April 27, 2010
இஸ்லாமிய நூலகம்
ஏப்ரல் 25, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் இஸ்லாமிய நூற்கள் மற்றும் குறுந்தகடுகள் நூலகம் ஆரம்பம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்நூலகத்தில் குர்ஆன் தமிழாக்கம், புகாரி 7 பாகங்கள், 50க்கும் மேற்பட்ட நூற்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட குறுந்தகடுகள் மக்களுடைய பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Sunday, April 25, 2010
இரத்த தான சேவை விருது
ஏப்ரல் 23, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கான இரத்த தான சேவையில் மொத்தம் உள்ள 28 கிளைகளில் இரண்டாம் இடத்தை பிடித்த ஆழ்வார்திருநகர் கிளைக்கு மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் விருது வழங்கிய போது
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
ஆழ்வார்திருநகர் மர்கஸ்
ஐவேளை தொழுகை நடைபெறும் தொழுகை நடைபெறும் மஸ்ஜிதுல் அ.’.லா பள்ளி

ஜும்மா தொழுகை நடைபெறும் இடம் (பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது)
ஜும்மா தொழுகை நடைபெறும் இடம் (பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது)
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Monday, April 19, 2010
தண்ணீர் பந்தல்

ஏப்ரல் 18, 2010: நபிகளாரின் பொன்மொழியை நடைமுறைப்படுத்தும் விதமாக, சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தாகத்தை தனிக்க வழிப்போக்கர்களுக்கு செலவில்லாமல் தூய்மையான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யும் வண்ணம் தழிகம் முழுவதும் தண்ணீர் பந்தல் வைக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக தாகம் தனிக்க தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்கள். இதனால் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Sunday, April 11, 2010
மரம்(செடி) நடுதல்

ஏப்ரல் 10, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக செடிகள் நட்டு பரமாரித்து வளர்க்க கிளை மஷூராவில் முடிவு செய்யப்பட்டது. இதன் ஆரம்பாக முதல் (நாவல்) செடி நடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
குறிப்பு: தங்களுடய வீடுகளில் செடி வளர்க்க விரும்பினால் கிளையை தொடர்பு கொண்டால் செடியை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Monday, April 5, 2010
எளிய மார்க்கம் கேள்விகள்
ஏப்ரல் 4, 2010: நமது கிளையில் நடந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் சில
பெண் வீட்டார் திருமண விருந்து கொடுப்பது மார்க்கத்திற்கு முரணானதா? ஜூலை மாநாடு மக்கள் கூட்டத்தை காண்பித்து ஆதாயம் தேடவா? சுன்னத் தொழுது கொண்டிருப்பவருடன் சேர்ந்து கடமையான தொழுகையை தொழலாமா? மஹரை நிர்ணயிப்பது ஆணா பெண்ணா?
குலா பெற்றால் வாங்கிய மஹரை திரும்பக் கொடுக்க வேண்டுமா? பெண்களுக்கு கப்ர் ஜியாரத் உண்டா? விரலசைத்தலில் இப்னு இத்ரீஸ் மற்றும் ஸாயிதாவுக்கு இடையேயுள்ள உள்ள வேறுபாடு? நோன்புப் பெருநாட்களில் தொழ செல்லும் முன் உண்ணலாமா? அகீகா எத்தனை நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்? பெண் கருத்தரித்த பின் அந்த கருவிற்கு உயிர் கொடுப்பதற்கு முன் அந்த கருவை கலைக்கலாமா? கருவில் உள்ள சிசு குறைவுள்ளதாக இருந்தால் அதை கலைக்கலாமா? இந்துக்கள் அவர்களின் விசேஷ நாட்களில் கொடுக்கும் பலகாரங்களை உண்ணலாமா? இனைவைத்தவரின் ஜனாஸாவை பின் தொடரலாமா? இனைவைத்தவரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா? தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொள்ளலாமா? நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடுமா? நாற்காலியில் அமர்ந்து தொழுவது சம்மந்தமாக சுன்னத் ஜமாஅத் கொடுத்த மார்க்க தீர்ப்பு செல்லுமா?

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
ஏப்ரல் 4, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் மாலை 6:30 மணி அளவில் முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நடைப்பெற்றது. சகோதரர் M.I. சுலைமான் அவர்கள் இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு,தங்களது கேள்விகளை ஆர்வத்துடன் கேட்டு பதிலைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் இமயம் டிவியில் ஒளிபரப்பப்படும்.
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Monday, March 29, 2010
தொழுகை பயிற்சி முகாம் –ஆண்கள்
மார்ச் 28, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் ஆண்களுக்கென பிரத்யோக தொழுகை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் பாருக் அவர்கள் தொழுகை பற்றிய விளக்கமும், செயல்முறை பயிற்சியும் அளித்தார்கள்.
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
தொழுகை பயிற்சி முகாம் –பெண்கள்
மார்ச் 27, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த மார்ச் 27, 2010 அன்று பெண்களுக்கென பிரத்யோக தொழுகை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரி பாத்திமா அவர்கள் தொழுகை பற்றிய விளக்கமும், செயல்முறை பயிற்சியும் அளித்தார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்!
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
கண்டன ஆர்ப்பாட்டம்

மார்ச் 25, 2010: நபி(ஸல்) அவர்களை பற்றி தரக்குறைவாக செய்தி வெளியிட்ட நக்கீரன் வார இதழைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னை ஜாம்பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நமது கிளை சகோதரர்களும் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !
Labels:
கிளை நிகழ்ச்சிகள்
Subscribe to:
Posts (Atom)