Monday, April 5, 2010

எளிய மார்க்கம் கேள்விகள்

ஏப்ரல் 4, 2010: நமது கிளையில் நடந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் சில
பெண் வீட்டார் திருமண விருந்து கொடுப்பது மார்க்கத்திற்கு முரணானதா? ஜூலை மாநாடு மக்கள் கூட்டத்தை காண்பித்து ஆதாயம் தேடவா? சுன்னத் தொழுது கொண்டிருப்பவருடன் சேர்ந்து கடமையான தொழுகையை தொழலாமா? மஹரை நிர்ணயிப்பது ஆணா பெண்ணா?
குலா பெற்றால் வாங்கிய மஹரை திரும்பக் கொடுக்க வேண்டுமா? பெண்களுக்கு கப்ர் ஜியாரத் உண்டா? விரலசைத்தலில் இப்னு இத்ரீஸ் மற்றும் ஸாயிதாவுக்கு இடையேயுள்ள உள்ள வேறுபாடு? நோன்புப் பெருநாட்களில் தொழ செல்லும் முன் உண்ணலாமா? அகீகா எத்தனை நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்? பெண் கருத்தரித்த பின் அந்த கருவிற்கு உயிர் கொடுப்பதற்கு முன் அந்த கருவை கலைக்கலாமா? கருவில் உள்ள சிசு குறைவுள்ளதாக இருந்தால் அதை கலைக்கலாமா? இந்துக்கள் அவர்களின் விசேஷ நாட்களில் கொடுக்கும் பலகாரங்களை உண்ணலாமா? இனைவைத்தவரின் ஜனாஸாவை பின் தொடரலாமா? இனைவைத்தவரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா? தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொள்ளலாமா? நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடுமா? நாற்காலியில் அமர்ந்து தொழுவது சம்மந்தமாக சுன்னத் ஜமாஅத் கொடுத்த மார்க்க தீர்ப்பு செல்லுமா?