Friday, April 6, 2012

மதரசாவில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி‏

அல்லாஹ்வின் அருளால் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக மக்தப் மதரசா நடைபெற்று வருகிறது. இதன் செயல்பாடாக மதரசாவில் படிக்கும் மாணவ மாணவியரின் பெற்றோர்களை அழைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏப்ரல் 06 ,2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகோதரர் பக்ருதீன் அவர்கள் 'மார்க்க கல்வியின் அவசியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு, நம்முடைய கிளையில் நடைபெற்று வரும் மதரசாவின் பாடத்திட்டங்கள் குறித்து விரிவாக பெற்றோர்களுக்கு விளக்கப்பட்டது. இறுதியாக மதரசாவின் செயல்பாடுகளை இன்னும்
மெருகேற்றுவதர்காக பெற்றோர்களிடத்தில் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!